Home தொழில் நுட்பம் கூகுள் மேப்பிற்கு போட்டியாக புதிய திட்டத்துடன் களமிறங்கும் ஆப்பிள்! 

கூகுள் மேப்பிற்கு போட்டியாக புதிய திட்டத்துடன் களமிறங்கும் ஆப்பிள்! 

557
0
SHARE
Ad

spotsetter

ஜூன் 9 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் இடையே திறன்பேசிகள் உருவாக்கம், மென்பொருள் உருவாக்கம் உட்பட அனைத்து துறைகளிலும் கடும் போட்டி நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் ஆப்பிள், ‘கூகுள் மேப்’ (Google Map)-க்கு போட்டியாக, ‘ஸ்போட்செட்டர்’ (Spotsetter) எனும் தேடு தளத்தை வாங்க உள்ளதாக தொழில்நுட்ப பத்திரிகைகள் ஆருடங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இந்த ஸ்போட்செட்டர் தேடு தளமானது இன்ஸ்டகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக தளங்களில் இருந்து தகவலைப் பெற்று, பயனர்களுக்கான வழித்தடங்களை இணையம் மூலம் தரவல்லது.

இது பற்றி ஆப்பிள் மற்றும் ஸ்போட்செட்டர் இடையே எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாக வில்லை என்றாலும், ஸ்போட்செட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜானி லீ, சூசகமாக இந்த வர்த்தகத்தினை ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கூகுள் நிறுவனம், கூகுள் மேப் சேவையில் பல வருடங்களாக திறம்பட செயலாற்றி வருகின்றது. மேலும், இந்த சேவையினை மெருகேற்றும் வகையில் ‘ஆளில்லா விமானங்கள்’ (Drone) மூலமாக இணைய சமிஞ்கைகள்  பெறுதல் உட்பட பல புதிய திட்டங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில், ஆப்பிளின் இந்த புதிய முயற்சி எத்தகைய பலனைத் தரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.