Home தொழில் நுட்பம் ஆப்பிளுக்கு போட்டியாக லண்டனில் கூகுள் ஸ்டோர் – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்!

ஆப்பிளுக்கு போட்டியாக லண்டனில் கூகுள் ஸ்டோர் – சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்!

637
0
SHARE
Ad

google-retail-shop-store-uk-2லண்டன், மார்ச் 13 – ஆப்பிள் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது ஸ்டோர்களைத் திறந்து பயனர்களை பரவசப்படுத்தும். இதனை தற்போது கூகுள் நிறுவனமும் பின்பற்றத் தொடங்கி உள்ளது.

லண்டனில் உள்ள டொட்டஹாம் கோர்ட் சாலையில், கூகுள் ஒரு ஆச்சரிய தொழில்நுட்ப உலகத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தனது ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் வாடிக்கையாளர்களுக்கு காட்சிபடுத்தி உள்ள கூகுள். அதனை அவர்கள் நேரடியாக பயன்படுத்த அனுமதித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதீத பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பாக மெய்-நிகர்‘ (Virtual Reality) திரை மூலம் கூகுள் எர்த்தை இயக்கும் பயனர்கள் தாங்கள் தேடிய இடத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

கூகுளின் லண்டன் ஸ்டோரின் புகைப்படங்களைக் கீழே காண்க:

googlest

பயனர்களின் புருவத்தை உயர்த்தும் கூகுள் ஸ்டாரின் நுழைவாயில்…

google4

பயனர் ஒருவர் வடிவமைக்கும் ‘கூகுள் டூடுல்’ (Google Doodle)…

google earth

மெய்-நிகர் திரை கொண்ட ‘கூகுள் எர்த்’ (Google Earth)

google2

 வாடிக்கையாளர்களுக்கு காட்சிபடுத்தப்பட்ட கூகுள் தயாரிப்புகள்

googlchrome                             ‘கூகுள் குரோம்’ (Google Chrome) கண்காட்சி