Home கலை உலகம் தொடர்ந்து 3 மொழிகளில் நடிக்கிறார் திரிஷா!

தொடர்ந்து 3 மொழிகளில் நடிக்கிறார் திரிஷா!

611
0
SHARE
Ad

Trisha0907-05சென்னை, மார்ச் 13 – ’என்னை அறிந்தால்’ படத்தையடுத்து திருமண நிச்சயம் முடிந்த பிறகு கூட இன்னமும் திரிஷாவிற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ‘ அப்பா டக்கர்’ மற்றும்  ‘லையன்’, ‘போகி’ என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அடுத்த படமாக இந்தியில் அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தின் மறுபதிப்பில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என உருவாக உள்ள இப்படத்தின் மூன்று மொழிகளிலும் திரிஷா நடிக்க இருக்கிறார்.

#TamilSchoolmychoice

தமிழில் பிரசாந்துடனும், தெலுங்கில் ரவி தேஜாவுடனும் நடிக்க உள்ளார். கன்னடத்தில் கதாநாயகர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. எனினும் மூன்று மொழிகளிலும் திரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திரிஷா சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானது பிரசாந்த் நடித்த ‘ஜோடி’ படத்தில் என்றாலும், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.