Home இந்தியா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களில் 2 பேரின் உடல் மீட்பு: மற்றவர்கள் பலியாகிருக்கலாம் என அச்சம்!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களில் 2 பேரின் உடல் மீட்பு: மற்றவர்கள் பலியாகிருக்கலாம் என அச்சம்!

525
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_79070246220குலுமணாலி, ஜூன் 9 – ஐதராபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றபோது அங்கு 7 மாணவிகள் உட்பட சுமார் 24 மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 24 பேரில், 2 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதம் உள்ள  22 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர் விக்னன ஜோதி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 2-ஆம் ஆண்டு மாணவர்கள் சுமார் 48 பேர் 10 நாள் சுற்றுலாவிற்காக  இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்களில் 24 பேர் ஆற்றிற்கு அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  24 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.