Home கலை உலகம் அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன் – இளையராஜா

அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன் – இளையராஜா

653
0
SHARE
Ad

Ilayarajaசென்னை, ஜூன் 9 – அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன், என்னிடம் இசை கேட்டுவாங்கும் அளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை என்றார் இளையராஜா.

இசை அமைப்பாளர் இளையராஜா ஒரு பத்திரிகை செய்தியில் கூறியதாவது, “ஒரு சிலரிடம் மட்டும் நீங்கள் அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களே என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் எனக்கு அன்பும் அக்கறையும் உள்ளது.

தனக்கென அடையாளம் எதுவும் இல்லாமல் என்னை சந்தித்து இசை அமைக்க கேட்டவர்களுக்கு அதை ஏற்று பணியாற்றி அவர்களுக்கு முகவரி தந்திருக்கிறேன். பெரிய இயக்குனர்கள் சிலர் உங்களிடம் பயம்காட்டுவதும், உங்களை அணுக தயங்குவதும் ஏன்? என்கிறார்கள்.

#TamilSchoolmychoice

ilayaraja (1)அதற்கு காரணம் அவரவர்களுக்கு தன்னைத்தானே பற்றியுள்ள நம்பிக்கைதான். தன் படத்துக்கான இசையை தான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதை நான் செய்துதர மாட்டேன் என்று எண்ணுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள்தான் என்னை அணுகுவதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அந்தந்த இயக்குனர்களின் எண்ணத்தோடு பயணித்து அதற்கு தகுந்தபடி காட்சிகளுக்கு இசை அமைக்கிறேன். என்னிடமிருந்து இசையை வாங்குமளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை என இளையராஜா கூறியுள்ளார்.