Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் கோக்கோ கோலா புதிய விளம்பர யுக்தி!    

சீனாவில் கோக்கோ கோலா புதிய விளம்பர யுக்தி!    

802
0
SHARE
Ad

downloadபெய்ஜிங், ஜூன் 10 – உலக அளவில் குளிர்பானங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கோக்கோ கோலா நிறுவனம், சீன இளைஞர்களிடையே தங்கள் குளிர்பானத்தை மேலும் பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் புதிய விளம்பர யுத்தியை கையாண்டுள்ளது. இதற்காக கோக்கோ கோலா, ஐசோபார் எனும் விளம்பர நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

இதன்படி, கோக்கோ கோலா குளிர்பானங்களின் லேபிள்கள், மறைக்கப்பட்ட சில குறியீடுகளைக் கொண்டிருக்கும். குளிர்பானகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், அந்த குறியீடினை குறுந்தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான ‘விசேட்’ (WeChat) மூலமாக ஸ்கேன் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது, பயனர்களின் திறன்பேசிகளுக்கு புகழ் பெற்ற சில பாடல்களின் ஒலித்துணுக்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த புதிய முயற்சி பற்றி ஐசோபார் நிறுவனத்தின் அதிகாரி டிம் டோஹெர்ட்டி கூறுகையில், “மக்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் விஷயங்களை நாங்கள் குளிர்பானங்களின் லேபிள்களில் புகுத்தியுள்ளோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.          

கோக்கோ கோலா குளிர்பானத்தில் பயன்படுத்தப்படும் உட்பொருட்கள் பற்றி கடந்த சில வருடங்களாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அதன் மதிப்பு உலக சந்தைகள் என்று அழைக்கப்படும் சீனா மற்றும் இந்தியாவில் சரிவை சந்தித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டே கோக்கோ கோலா பல விளம்பர யுக்திகளை கையாண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.