கோலாலம்பூர், ஜூலை 31 – கோக்கோ கோலா குளிர்பானத்தை நினைத்தவுடனே பலருக்கு புத்துணர்ச்சி அலைபாயத்தொடங்கும். பலர் தாகம் தணிக்க, தண்ணீர் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டனர். சாப்பிடும் பொழுது, கோக்கோ கோலா இல்லை என்றால் உணவே இறங்காது பலருக்கு.
இந்நிலையில், 330மி.லி அளவுள்ள கோக்கோ கோலாவை குடித்தவுடன் அடுத்த 60 நிமிடங்களில் நிகழும் உடலியல் மாற்றங்களை, மருந்தாளர் நிரஜ் நாயக், ஏழு நிலைகளில் விளக்கி உள்ள கட்டுரை, பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைப் படித்த உடன், இத்தகைய அபாயகரமான பானத்தை ஏன் உலக நாடுகள் அனுமதிக்கின்றன? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
நிரஜ் நாயக் விளக்கும் அந்த ஏழு நிலை மாற்றங்களைக் கீழே காண்க:
எச்சரிக்கை, இதனை படித்த பின்பு பலருக்கு குளிர்பானம் குடிக்கும் நினைப்பே வராமல் போகலாம்.
முதல் நிலை : கோலா குடித்த முதல் 10 நிமிடங்கள்
10 தேக்கரண்டி சர்க்கரை நம் உடலில் சேர்கிறது (இது ஒருநாளுக்கான அதிபட்ச அளவு). அதிக இனிப்பு சுவை காரணமாக நமக்கு வாந்தி ஏற்படாமல் இருக்க பாஸ்பாரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இது சர்க்கரையின் சுவையை மட்டும் மட்டுப்படுத்தி விடும்.
இரண்டாம் நிலை: 20 நிமிடங்கள்
இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலப்பதால், இன்சுலின் சிதறல் அதிகமாகும். குறிப்பிட்ட அந்த தருணத்தில், கல்லீரல் அனைத்து சர்க்கரையையும் உடனடியாக கொழுப்பாக மாற்றிவிடும்.
மூன்றாம் நிலை: 40 நிமிடங்கள்
கல்லீரல், ரத்த ஓட்டத்தில் அதிக அளவு சர்க்கரையை கலக்கும்.பானத்தில் கலந்திருக்கும் காஃபின், உங்கள் கண்மணிகளை விரியச் செய்யும். ரத்த அழுத்தம் அதிகமாகும். நமது மூளையில் அடினோசின், உடனடியாக அயர்ச்சியைத் தடுக்கும்.
நான்காம் நிலை: 45 நிமிடங்கள்
நமது உடல் உடனடியாக ‘டோபமைன்’ (Dopamine) உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம், மகிழ்வு மையங்கள் (Pleasure Centers) தூண்டப்படும். இதே வேலையை, போதை வஸ்த்துவான ஹெராயினும் செய்கிறது.
ஐந்தாம் நிலை: 60 நிமிடங்கள்
பாஸ்பாரிக் அமிலம், நமது சிறுகுடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தை ஒன்றாக இணைக்கிறது. இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் செயற்கையாக அதிகப்படுத்தப்படும்.
60 நிமிடங்களுக்குப் பிறகு
காஃபினின், டையூரிடிக் (சிறுநீர் நீக்க ஊக்கிகள்) குணத்தினால், நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கழிக்கும் சிறுநீரில், பானத்தில் இருக்கும் தண்ணீர், நமது எழும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம், சோடியம் மற்றும் பிணைக்கப்பட்டு இருக்கும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெளியேறிவிடும்.
நமது உடலில் கடந்த சில மணித்துளிகளில் ஏற்பட்ட புத்துணர்ச்சி படிப்படியாகக் குறையும். கோபமான மனநிலை ஏற்படும். உடலில் இருக்கும் தண்ணீர் மொத்தாக வெளியேறிவிட்டதால், நமது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஒன்றாக கலப்பதில் சிரமம் ஏற்படும். சிறந்த முறையில் இயங்கி வந்த ஹைட்ரேட் அமைப்பு, மட்டுப்படும்.
இறுதியாக நிரஜ் நாயக் கூறுகையில், “மனிதர்களுக்கு ஏற்படும் உடல் பருமன், மாரடைப்பு, நீரிழிவு போன்ற அனைத்து நோய்களுக்கும் மிக முக்கிய காரணமாக ஒரு குறிப்பிட்ட கூட்டுப்பொருள் விளங்குகிறது, அது தான் ‘பிரக்டோஸ்’ (Fructose). அந்த கூட்டுப் பொருள் கோக்கோ கோலாவில் மிக அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.