Home நாடு மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி

மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி

612
0
SHARE
Ad

khalid1கோலாலம்பூர், ஜூலை 31 – நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும், மொகிதின் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.

1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமரான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் காணொளிப் பதிவு ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தக் காணொளிப் பதிவு குறித்து பிரதமர் நஜிப் இன்னும் கருத்துரைக்கவில்லை. இந்நிலையில் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்துரைக்கப் போவதில்லை என ஐஜிபி காலிட் அபு பக்கர் கூறினார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அது குறித்து தாம் கருத்துரைக்க இயலாது என்றார் அவர்.

“தற்போதைய நிலையில் நான் கருத்து ஏதும் தெரிவிக்க மாட்டேன். 1எம்டிபியுடன் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அதை அவர்கள் (சிறப்பு புலனாய்வுக் குழுவினர்) பார்த்துக் கொள்வார்கள்,” என்றார் அபு பக்கர்.

தனது இல்லத்திற்கு வந்துள்ள விருந்தினர்களிடம் மொகிதின் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ள அக்காணொளிப் பதிவு சுமார் 53 நொடிகள் ஓடுகிறது.

கைபேசியில் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தக் காணொளிப் பதிவில் 1எம்டிபி பணம் பிரதமரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது தொடர்பில், அவரிடம் தாம் விசாரித்ததாக மொகிதின் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.