Home நாடு சேத்தி பதவி விலகவில்லை: பேங்க் நேகாரா அறிவிப்பு

சேத்தி பதவி விலகவில்லை: பேங்க் நேகாரா அறிவிப்பு

598
0
SHARE
Ad

Zetiகோலாலம்பூர், ஜூலை 31 – பேங்க் நேகாரா ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் (படம்) அப்பதவியில் இருந்து விலகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேத்தி பதவி விலகிவிட்டதாகவும், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் நிதிச் சந்தைகளிலும் இதுகுறித்த பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் அத்தகவல் முற்றிலும் வதந்தி என பேங்க் நேகாரா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி பேங்க் நேகாரா செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டபோது, “அந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது,” என அவர் கூறியதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

67 வயதான சேத்திக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலும் வெறும் வதந்தியே என மற்றொரு செய்தித் தொடர்பாளர் கூறியதாக ‘த ஸ்டார்’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

“அவர் (சேத்தி) நலமாக உள்ளார். வழக்கம்போல் பணிகளைக் கவனிக்கிறார்,” என அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.