Home உலகம் மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகீ போட்டியிடுவது உறுதி – வேட்புமனு தாக்கல் செய்தார்!

மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகீ போட்டியிடுவது உறுதி – வேட்புமனு தாக்கல் செய்தார்!

660
0
SHARE
Ad

aung-san-suu-kyiநைபிடாவ், ஜூலை 31 – மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தனது ‘என்டிஎல்’ (NDL) கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக அவர் சமீபத்தில் தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.

மியான்மரின் தற்போதய அதிபர் தெயின் செயினின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து ஆங் சாங் சூகீ, கடந்த சில வாரங்களுக்கு முன்பே, தனது என்டிஎல் கட்சி, பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று அவர், அக்கட்சியின் முதல் வேட்பாளராக தனது வேட்புமனுவை பதிவு செய்தார். இத்தேர்தலில் சூகீயின் என்டிஎல் கட்சி, 498 பாராளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

கடைசியாக 1990-ல், என்டிஎல் கட்சி மியான்மர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனினும், அதற்குச் சில நாட்களுக்கு முன்னரே ஆங் சாங் சூகீ கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சுமார் 21 வருட வீட்டுச் சிறைக்குப் பிறகு உலக நாடுகளின் வற்புறுத்தலால், கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, ஒருவேளை என்டிஎல் கட்சி வெற்றி பெற்றால் ஆங் சாங் சூகீ, மியான்மர் ஜனாதிபதியாக பதவி ஏற்பாரா? என்பது குறித்த கேள்விக்கு என்டிஎல் கட்சியினர் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால், மக்கள் விரும்பும் ஒருவர் ஜனாதிபதி ஆவார்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.