கராச்சி, ஜூன் 11 – ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியர்கள் எவரும் சிக்கிக் கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட மலேசிய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட பின்னர் அந்த விமான நிலையத்தில் மலேசியர்கள் எவரும் இல்லை என்பது தெரிய வந்ததாக கராச்சியில் உள்ள மலேசிய துணை தூதர் அபு பக்கார் மாமாட் கூறினார்.
கராச்சியில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கும் படியும் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றும் படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானுக்கு பயணம் செல்வதற்கு முன்னர் மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அபு பக்கார் ஆலோசனை கூறினார்.
கராச்சி விமான நிலையத் தாக்குதலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.