Home உலகம் கராச்சி தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயம்!

கராச்சி தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயம்!

398
0
SHARE
Ad

download (3)கராச்சி, ஜூன் 12 – பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், அந்நாட்டில் சர்வதேச விமான சேவை பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, “அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு காரணங்களால் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள், கராச்சியில் தங்கள் விமான சேவையை நிறுத்திக் கொண்டன.

இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதால், சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. கராச்சியில் விமான சேவையைத் தொடர்வது குறித்து அந்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன” என்று அவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக, பி.டி.ஐ. செய்தியாளருக்கு வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வாரத்தில் கராச்சிக்கு வரும் எங்கள் நிறுவனத்தின் 2 விமானங்கள் ஹாங்காங்கில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.”

“அந்த விமானம் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கராச்சிக்கு வந்து செல்லும். விமான சேவையை மீண்டும் தொடர்வது குறித்து இந்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.