Home இந்தியா மோடியை தீவிரவாதியாக சித்தரித்து ஆண்டுமலர் வெளியீடு! கல்லூரி முதல்வர் உட்பட 7 பேர் கைது!

மோடியை தீவிரவாதியாக சித்தரித்து ஆண்டுமலர் வெளியீடு! கல்லூரி முதல்வர் உட்பட 7 பேர் கைது!

525
0
SHARE
Ad

narendra-modi_திருச்சூர், ஜூன் 11 – கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரில் தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரி படங்களுடன் பிதமர் நரேந்திரமோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2012-2013-ஆம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்த கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒரு பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மாகாந்தி, அன்னை தெரசா, ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், லெனின், நெல்சன் மண்டேலா உள்பட பலரது படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

#TamilSchoolmychoice

அந்த மலரின் மற்றொரு உள்பக்கத்தில் எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பின் கீழ் பிரபல சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், தீவிரவாதிகள் அஜ்மல் கசாப், பின்லேடன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஆகியோரது படங்களுடன் பிரதமர் நரேந்திரமோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

hitler-modiதீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் படம் வெளியான சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் மலர் வெளியீட்டாளர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுமோர்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரை தீவைத்து எரித்தனர். பிரதமர் நரேந்திரமோடியின் படத்தை தவறாக பிரசுரித்த கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

குன்னம் குளம் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர், மாணவர் மலர் ஆசிரியர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உண்மைதான் என்று தெரியவந்ததால் கல்லூரி முதல்வர் உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.