Home நாடு “அமைச்சரவையில் மாற்றம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” – நஜிப்

“அமைச்சரவையில் மாற்றம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” – நஜிப்

562
0
SHARE
Ad

Najibtunஅஷ்காபாத், ஜூன் 11 – அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப்போவதாக கூறப்படுவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.

பிரதமர் நஜிப் தனது இரண்டு நாட்கள் துர்க்மேனிஸ்தான் பயணம் முடிந்து, நேற்று இரவு கோலாலம்பூருக்கு திரும்பும் வேளையில் அஷ்காபாத் விமான நிலையத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப்போவதாக கூறப்படுவது குறித்து மலேசிய செய்தியாளர்கள் நஜிப்பிடம் கேள்வி எழுப்பினர்.

#TamilSchoolmychoice

இதற்குப் பதிலளித்த நஜிப், “எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது” என்று கூறினார்.

துர்க்மேனிஸ்தானுக்கு இரண்டாவது முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட நஜிப், இம்முறை தனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றார்.

மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் மற்றும் கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ கியோங் ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இணைத்து புதிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.