Home உலகம் ஆப்கானில் அமெரிக்க படைவீரர்கள் தவறான தாக்குதல் – சொந்தப்படைவீரர்கள் 5 பேர் பலி!

ஆப்கானில் அமெரிக்க படைவீரர்கள் தவறான தாக்குதல் – சொந்தப்படைவீரர்கள் 5 பேர் பலி!

477
0
SHARE
Ad

lat-chopper-wre0015912716-20140312காபூல், ஜூன் 11 – ஆப்கானில் அமெரிக்க படைவீரர்களின் தவறான தாக்குதலில் சொந்தப்படைவீரர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு ஜாபுல் மாகாணத்தில் அர்கான்தாப் மாவட்டத்தில் அமெரிக்க வீரர்கள் 5 பேர் ஒரு தீவிரவாத தாக்குதல் நடவடிக்கையை நடத்தி விட்டு, தங்கள் முகாமுக்கு  திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை தீவிரவாதிகள் என கருதி அமெரிக்க படை வீரர்கள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் சிக்கிய ஐந்து அமெரிக்க படை வீரர்களும் பலியாகினர்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக தலீபான் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அகமதி கூறுகையில், ‘‘வெளிநாட்டு படைகள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் தலையிட்டன. அவர்கள் தவறுதலாக தங்கள் சொந்தப்படையினரையே கொன்று விட்டனர்’’ என்று கூறியுள்ளார்.