Home நாடு ஜோகூர் மசோதாவில் அந்நியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் – மகாதீர் கருத்து

ஜோகூர் மசோதாவில் அந்நியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் – மகாதீர் கருத்து

533
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர், ஜூன் 11 – சுல்தான்களின் முழு அதிகாரத்தோடு ஆட்சிக் காலத்தில் பெருமளவிலான நிலங்களை அந்நியர்களுக்கே குறிப்பாக சிங்கப்பூரியர்களுக்கே கொடுத்துள்ளனர் என்று தனது வலைத்தளத்தில் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது எழுதியுள்ளார்.

சுல்தான்கள் அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதை சாடி வந்த அவர் சர்ச்சைக்குள்ளான ஜோகூர் மசோதாவில் அந்நியர்கள் சம்பத்தப்பட்டிருக்கிறார்கள் என்று கடுமையாக கூறியுள்ளார்.மகாதீர் எவரையும் குறிப்பிட்டு கூறாவிட்டாலும் அண்டை நாடான சிங்கப்பூரர்களைத் தான் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்கள் அருகாமையில் இருக்கும் ஜோகூர் மாநிலத்தில் தான் பெருமளவில் நிலங்களையும் சொத்துகளையும் வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர். அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியரசருக்கு செயலாட்சி அதிகாரம் கிடையாது. எனவே, அவர் நாட்டின் நிர்வாகத்தில்  எந்த வகையிலும் தம்மை உட்படுத்திக் கொள்ள முடியாது.

#TamilSchoolmychoice

இது தேவை என்று கருதப்பட்டது. ஏனென்றால், கடந்த காலங்களில் மலாய் மாநிலங்களை ஆண்டவர்கள் முழு அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். மக்கள் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தடை செய்யப்பட்டிருந்தனர்.இதன் விளைவாக பெருமளவிலான நிலங்கள் அந்நிய நாட்டினருக்கு கொடுக்கப்பட்டது. வணிக சலுகைகள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டது என்று மகாதீர் கூறியுள்ளார்.

மலாய் யூனியன் உருவாக்கப்படுவதற்காக மலாய் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆட்சிப் பொறுப்பாளரின் கோரிக்கைக்கு இணங்க அவர்களுடைய மாநிலங்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்ததையும் மகாதீர் நினைவுபடுத்தினார்.

இந்தியாவில் ராஜாக்களும், இந்தோனேசியாவில் சுல்தான்களும் அவர்களுடைய அரியணையிலிருந்து இறக்கப்பட்ட காலத்தில் இது இங்கு நடந்துள்ளது என்பதை உண்மை என்று மகாதீர் ஏற்றுக் கொண்டார்.

இருப்பினும், அவர்களுடைய அதிகாரங்களை அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையும் மக்களையும் தற்காப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து மகாதீர் மேலும் கூறுகையில், “பிரதமர் உறுதியாக இருப்பதோடு பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அல்லது பணிவு ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டுவிடக்கூடாது. குறிப்பாக பழிபாவத்துக்கு அஞ்சாதவர்கள் அவர்களுடைய காரியத்தைச் சாதிப்பதற்காக சுல்தான்களை பயன்படுத்திக் கொள்வதோடு சட்டம் மற்றும் கொள்கையிலிருந்து தப்பித்துக் கொள்வார்” என்று கூறினார்.