Home இந்தியா சுமித்ரா மகாஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

சுமித்ரா மகாஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

526
0
SHARE
Ad

sumitra-mahajanசென்னை, ஜூன் 11 – நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ரா மகாஜனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது, “16-வது நாடாளுமன்ற சபாநாயகராக தாங்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

மக்களுக்காக, மக்களவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன், திறம்பட செயலாற்றியுள்ளதோடு, நாடாளுமன்றவாதியாக பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டிருக்கும் தங்களுக்கு, இந்த அங்கீகாரம் பொருத்தமானதாகும்.

உங்களுடைய நீண்ட அனுபவமும், முதிர்ச்சியும் 16-வது மக்களவையை சுமுகமாக நடத்திச் செல்ல உறுதுணையாக இருக்கும். தங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய நல்வாழ்த்துகள் என ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.