“இஸ்லாமிய சமய இலாகா அதிகாரிகள் அதிகார ஆணவத்துடன் நடந்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தின் போது இந்து ஆலயத்தினுள் நுழைந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி மணப் பெண்ணை விசாரணைக்கு கொண்டு சென்றது மனிதநேயமற்ற செயல். திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு காரணங்கள் இருந்தாலும் அவர்கள் சரியான அணுகுமுறையை கையாண்டிருக்க வேண்டும்” என்று அன்வார் கூறினார்.
மதம் மாறிய சீனர் ஒருவர் சீன முறைப்படி அடக்கம் செய்யப்படுவதை பினாங்கு மாநில சமய இலாகா அதிகாரிகள் அண்மையில் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிகாரிகளின் ஆணவம் ஒரு மோசமான, அபாயகரமான செயலாக இருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமின்றி முஸ்லிம்களையும் கூட இவர்கள் சிறுமைப்படுத்துவது கண்டிக்கதக்கது என்றும் அன்வார் கூறினார்.