Home நாடு பிள்ளைகளை சிறார் மையத்தில் ஒப்படைப்பதே நல்லது – காலிட் ஆலோசனை

பிள்ளைகளை சிறார் மையத்தில் ஒப்படைப்பதே நல்லது – காலிட் ஆலோசனை

519
0
SHARE
Ad

Tan-Sri-Khalid-Abu-Bakarகோத்தா கினபாலு, ஜூன் 11 – குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் ஷரியா, சிவில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் முரண்படும் போது, இந்த முரண்பட்ட தீர்ப்புகளால் குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து காவல்துறை நடுநிலையைக் கடைப்பிடிக்கும் என போலீஸ் படைத் தலைவர் ஜஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபக்கார் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய, போராட்டத்திற்கு முக்கியக் காரணமாக விளங்கும் பிள்ளைக்கான பராமரிப்பைச் சிறார் பாதுகாப்பு மையத்தின் வசம் ஒப்படைப்பதே இதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்று தாம் கருதுவதாக காலிட் தெரிவித்துள்ளார்.

சபா மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று எஸ்ஸோன் பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் காலிட் இதனைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஷரியா, சிவில் நீதிமன்றங்களின் உத்தரவு அமலாக்கமின்றி இந்நடவடிக்கை எடுக்கப்படும். இதன்வழி சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் தாயும்,தந்தையும் நேரில் சென்று காணவாய்ப்பு கிட்டும் என்றும் காலிட் குறிப்பிட்டார்.

பேராக் மாநிலத்திலும் நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் பிள்ளைகளைத் தாயிடமிருந்து தந்தையர் பறித்துச் சென்ற சம்பவத்தால் நேர்ந்திருக்கும் இந்த நெருக்கடி குறித்து காலிட் இவ்வாறு விளக்கமளித்தார்.