Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் ( B பிரிவு) – நெதர்லாந்து 5 – ஸ்பெயின் 1...

உலகக் கிண்ணம் முடிவுகள் ( B பிரிவு) – நெதர்லாந்து 5 – ஸ்பெயின் 1 –

635
0
SHARE
Ad

சால்வடோர் (பிரேசில்), ஜூன் 14 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு உலகக் கிண்ண காற்பந்து வெற்றியாளரான ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் 5-1 கோல் வித்தியாசத்தில் நெதர்லாந்திடம் ஸ்பெயின் தோல்வி கண்டது.

Group B - Spain vs Netherlands

#TamilSchoolmychoice

ஏறத்தாழ 26 நிமிடத்தில், ஸ்பெயின் ஆட்டக்காரர் கோல் கம்பத்தின் அருகில் கீழே தள்ளப்பட்ட காரணத்தால் கிடைத்த பினால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் ஆட்டக்காரர் க்சாபி அலோன்சோ கோல் அடித்தார்.

ஆனால் நெதர்லாந்து குழுவின் தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) ரோபின் வான் பெர்சி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார்.

நெதர்லாந்தின் மற்றொரு முதிர்ந்த விளையாட்டாளரான அர்ஜன் ரோப்பன் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார்.

Group B - Spain vs Netherlands

அர்ஜன் ரோப்பன்

Group B - Spain vs Netherlands

படங்கள்: EPA