Home நாடு கிட் சியாங் மருத்துவமனையில் அனுமதி! சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார்!

கிட் சியாங் மருத்துவமனையில் அனுமதி! சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார்!

528
0
SHARE
Ad
Lim Kit Siang

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14- ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் (படம்) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்த தகவலை அவரது மகனும், பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் உறுதிப்படுத்தினார்.

என்ஜியோகிராம் சோதனை முடிவில் அவரது இருதய இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏதுமில்லை என்றும், அவருடைய இருதயம் இயல்பாகவே இயங்குகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

லிம் கிட் சியாங்கை மருத்துவர்கள் நன்றாக ஓய்வெடுக்கும் படி கூறியிருப்பதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.

மேலும், தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்த அனைருக்கும் தனது நன்றியையும் லிம் குவான் தெரிவித்துக்கொண்டார்.