Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணத்திற்கு எதிராக பிரேசிலில் ஆர்ப்பாட்டங்கள் : வாண வேடிக்கை ஒருபுறம்..வெடிச் சத்தம் மறுபுறம்!

உலகக் கிண்ணத்திற்கு எதிராக பிரேசிலில் ஆர்ப்பாட்டங்கள் : வாண வேடிக்கை ஒருபுறம்..வெடிச் சத்தம் மறுபுறம்!

508
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 14 – உலகமே காற்பந்து போட்டிகளின் சிகரமான உலகக் கிண்ணப் போட்டிகளின் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, இந்தப் போட்டிகளுக்கு எதிராக பிரேசிலில் உள்ள சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர்.

பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் குரோசியாவுக்கு எதிராகக் களமிறங்கிய அதே தருணத்தில், வீதிகளில் இறங்கி பலர் ஆக்ரோஷமான முறையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரேசிலின் காவல் துறையினர் கடுமையான முறையில் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.

உலகக் கிண்ண தொடக்க விழாவில் வண்ணமயமான கவர்ச்சி ஆட்டங்கள் – பாடல்கள் – வாண வேடிக்கைகள் என ஒருபுறம் கும்மாளங்கள் அரங்கேறிய அதே தருணங்களில் வீதிகளில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக  காவல் துறையினரின் கண்ணீர் வெடிகளும், துப்பாக்கி வெடிகளும் கேட்டன.

#TamilSchoolmychoice

அந்த சம்பவங்களின் படக் காட்சிகள் இதோ இங்கே:-

Protests

Protests

Protests

Protests

Protests

படங்கள்: EPA