Home கலை உலகம் ‘கத்தி’ கடைசி நாள் படப்பிடிப்பு: படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறி பரிசு கொடுத்த விஜய்!

‘கத்தி’ கடைசி நாள் படப்பிடிப்பு: படக்குழுவினருக்கு பிரியாணி பரிமாறி பரிசு கொடுத்த விஜய்!

570
0
SHARE
Ad

vijayசென்னை, ஜூன் 16 – கத்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில், படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி பரிமாறி,பரிசுகள் கொடுத்தார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி.

வேகவேகமாக நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று புஷ்பா கார்டனில் நிறைவடைந்தது. கடைசி நாளன்று அனைவருக்கும் விருந்தளித்து, பரிசு தர விரும்பினார் விஜய்.

vijay,அதன்படி பெரிய பந்தல் போட்டு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட அனைவரையும் அமர வைத்து, தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய். பின்பு விஜய்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பரிமாறினார்.

#TamilSchoolmychoice

vijay ,இந்த விருந்துக்கு படக்குழுவினர் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரையும் வரவழைத்திருந்தார். விருந்து முடிந்த பிறகு, தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு உடைகள் மற்றும் பரிசுகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐங்கரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.