Home வணிகம்/தொழில் நுட்பம் ஈராக் உள்நாட்டு போரினால் உலக அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்பு!

ஈராக் உள்நாட்டு போரினால் உலக அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்பு!

567
0
SHARE
Ad

crude oilஜூன் 17 – ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்துடன் போரிடும் அவர்கள் மொசூல், திக்ரித், கிர்குக் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளனர்.

இதன் எதிரொலியாக உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் வரலாறு காணாத அளவில் 9 மாத உயர்வினைச் சந்தித்து உள்ளது.

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஈராக்கின் மிக முக்கிய நகரமான மொசூல் கைப்பற்றப்பட்டதால் அங்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தீவிரவாத குழுக்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க சந்தைகளில் 107 அமெரிக்க டாலர்களுக்கு மேல் சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், தால் அஃபர் நகரையும் தீவிரவாதிகள் கைப்பற்றியதால் எண்ணெய் ஏற்றுமதி அங்கு அனைத்து பகுதிகளிலும் முடக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் ஈராக்கில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளிலும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 63 சென்ட்ஸ் உயர்ந்து 113.09 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.