சோமாலியாவில் முஸ்லிம் சட்டத்தை நடைமுறைபடுத்த கோரி அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இவர்களை கட்டுப்படுத்த ஆப்ரிக்க ஒன்றியத்தை சேர்ந்த படையினர் அங்கு முகாமிட்டு அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் அண்டை நாடான கென்யா படையினரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லாமு மாவட்டத்தின் கடலோர நகரமான பெகிடோனியில் பொதுமக்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
குறிப்பாக இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காததாலும், சோமாலி மொழி தெரியாததாலும் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகளும், நேரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.