Home Featured உலகம் யானைகளிடத்தில் இல்லாத தந்தங்களுக்கு மதிப்பே இல்லை – கென்யா அதிபரின் துணிச்சல் முடிவு!

யானைகளிடத்தில் இல்லாத தந்தங்களுக்கு மதிப்பே இல்லை – கென்யா அதிபரின் துணிச்சல் முடிவு!

912
0
SHARE
Ad

Ivory burnநைரோபி தேசியப் பூங்கா (கென்யா) – “எங்களைப் பொறுத்தவரையில் தந்தங்கள் என்பது, யானைகளிடத்தில் இல்லையென்றால், அது மதிப்பற்ற ஒன்றாகவே கருதுகின்றோம்” என்று கூறியிருக்கிறார் கென்யா அதிபர் உரு கென்யாட்டா.

இதை வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லவில்லை அவர், கடந்த சனிக்கிழமை நைரோபி தேசியப் பூங்காவில் சுமார் 100 டன் எடையுள்ள யானைத் தந்தங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தீமூட்டியிருக்கிறார்.

கென்யா அளித்துள்ள தகவலின் படி, அவை சுமார் 6,700 யானைகளிடமிருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. அது முற்றிலும் எரிந்து முடிக்கவே சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மில்லியன் கணக்கில் மதிப்புள்ள தந்தங்கள் அழிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வை பலர் ஒரு வரலாற்றுச் சம்பவமாகவே கருதி வருகின்றனர்.

Ivory burn 2அதேவேளையில், கென்யாவின் இந்தச் செயலுக்கு பலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும், கென்யா அதிபர் உரு கென்யாட்டா தனது முடிவில் இருந்து மாறுவதாக இல்லை.

“கென்யா ஏழை நாடாக இருக்கலாம். ஆனால் நாங்கள் தேசியப் பாரம்பரியத்தில் செழிப்பு மிக்கவர்கள். அதை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்.”

“நாங்கள் மிகத் தெளிவாக சொல்கிறோம். தந்தங்கள் யானைகளிடத்தில் இல்லை என்றால் , எங்களைப் பொறுத்தவரையில் அவை மதிப்பற்றவை தான்”

Ivory burn 1“இந்தத் தந்தங்களை அழிப்பதன் மூலம் அனைவருக்கும் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால், எங்களின் தேசியப் பாரம்பரியம் விற்பனைக்கு அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் யானைத் தந்தங்களுக்கு இருந்து வரும் அதிக தேவை காரணமாக, ஆண்டுதோறும் ஆப்பிரிக்கக் காடுகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

Ivory burn3இந்நிலை தொடர்ந்தால், இன்னும் முப்பது, நாற்பது ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் யானைகள் இனம் முற்றிலும் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.