Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்

685
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இஸ்தானா ஆலாம் ஷா, இன்று சிலாங்கூர் அரண்மனை அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் அவர்கள் இருவரும் தங்களது வருத்தத்தையும், மனக்கசப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இன்னும் ஒரு சிலர் விலங்குகளை வேண்டுமென்றே கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும், அவற்றைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி இன்னும் தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“அத்தகைய விலங்குகள் மீது நாம் அனைவரும் இரக்கம் காட்டுவது மிகவும் முக்கியம். மேலும் செல்லப்பிராணியாக இருந்தாலும் அல்லது அவர்களின் சொந்த வாழ்விடத்தில் இருந்தாலும் உணவளிப்பதும் பாதுகாப்பதும் நமது பொறுப்பாகும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊராட்சி மன்றங்கள் விலங்குகளின் பிரச்சனையை முழுமையாய் கையாள்வதில் மிகவும் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் சுல்தான் ஷராபுடின் உத்தரவிட்டார்.

அப்பாவி விலங்குகளை ஒடுக்கப்படுவதிலிருந்து கையாள்வதற்கு துருக்கியை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.