Home One Line P1 துன் மகாதீர் உடல்நலத்துடன் இருக்கிறார்- சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலி

துன் மகாதீர் உடல்நலத்துடன் இருக்கிறார்- சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலி

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் உடல்நிலை சரியில்லாமல், மூச்சுவிட முடியாமல் இருப்பதாகவும் வாட்சாப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிய செய்தி போலியானது என்று முன்னாள் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது மகள் மரினாவும், அவரது உதவியாளர்களில் ஒருவரும், மலேசியாகினியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். 95 வயதான மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் கடுமையான பாதிக்கப்படவும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

“மகாதீர் இன்றும் உடல்நலத்துடன் வீட்டில் இருக்கிறார்,” என்று அவரது உதவியாளர் அடாம் முக்ரிஸ் முஹாய்டின் பதிவுட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கொவிட் -19 தொற்றுக் கண்டது குறித்து  மகாதீர் தனது வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட ஒரு நாள் கழித்து, இந்த செய்தி வெளிவந்துள்ளது.