கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி முமகட் நோரை கேட்டுக் கொண்டது.
சனுசி, மாநில மக்களுக்கு உதவ முற்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், அதற்கு பதிலாக மாநிலத்தில் தைப்பூச விடுமுறையை இரத்து செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவதாகவும் அதன் தலைவர் முகமட் பிர்டாவுஸ் ஜோஹரி தெரிவித்தார்.
கெடா மக்களுக்காக எந்தவொரு உதவி அறிவிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
“ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்திய போது வரை கெடா மக்களுக்கு உதவ உதவி அறிவிப்பு எதுவும் இல்லை,” என்று பிர்டாவுஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக திருவிழாவிற்கான கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதால், கெடாவில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை இருக்காது என்று புதன்கிழமை சனுசி அறிவித்தார்.
பொது மக்கள் உட்பட, மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, மசீச துணைத் தலைவர் டத்தோ தான் டீக் செங் மற்றும் பி.கே.ஆர் இளைஞர் தலைவர் அக்மால் நாசிர் உள்ளிட்டோரிடமிருந்து சனுசி கடுமையான விமர்சனத்தைப் பெற்றுள்ளார்.