Home One Line P2 சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

488
0
SHARE
Ad

சென்னை: ஜனவரி 27- ஆம் தேதி அன்று விடுதலையாவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா உடல்நிலையில் பதிப்பு ஏற்பட்டது. இப்போது, சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றார்.

தீவிர நுரையீரல் தொற்று இருப்பதால் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று இரவு பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.