Home One Line P1 மசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது!

மசூதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் படியே கூட்டம் கூடியது!

601
0
SHARE
Ad

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை புறக்கணிப்பதாக வெளியான  காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது நூறுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இந்த பிரார்த்தனை கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிப்பதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரார்த்தனைக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த வரம்புகள் உள்ளன என்றும், காணொலியில் உள்ள மசூதி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் நெகிரி செம்பிலான் முப்தி முகட் யூசோப் அகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது புதிய விஷயம் அல்ல. இது ஒரு பிரச்சனையாக மாற்றப்படக்கூடாது. மசூதியில் அதிகபட்ச மக்கள் எண்ணிக்கை அந்தந்த வழிபாட்டு மண்டபங்களின் திறனால் தீர்மானிக்கப்படுகிறது. கூட்டத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மற்றும் பாதுகாப்பான கூடல் இடைவெளியை உறுதி செய்யும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் மாநில மதத் துறை கண்டிப்பாக பின்பற்றுகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

சிரம்பானில் கம்போங் செந்தோசாவில் உள்ள மசூதியின் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பெரும் கூட்டத்தைக் காட்டும் காணோலி பதிவு நேற்று பரவலாகி வருவதை அடுத்து இந்த கருத்து வெளியிடப்பட்டது