Home நாடு தாய்லாந்தில் இருந்து மாடுகள் வாங்குவது உடனடியாக நிறுத்தப்படும்

தாய்லாந்தில் இருந்து மாடுகள் வாங்குவது உடனடியாக நிறுத்தப்படும்

962
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா தாய்லாந்தில் இருந்து மாடுகள் மற்றும் எருமைகள் இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தியுள்ளதாக கால்நடை சேவைத் துறை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சுமார் 41 நகரங்களில் கால்நடைகளிடையே தோல் நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கால்நடைத் தொழிலுக்குள் நோய் பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை துறைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்து இறக்குமதியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தாய்லாந்தில் கால்நடை விநியோகஸ்தர்களுடன் எந்தவொரு மாடுகளையும் பெற வேண்டாம் என்று அது கூறியுள்ளது.

“பண்ணைகள் அல்லது தொழுவத்தில் ஏதேனும் கால்நடைகள் இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டினால், அருகிலுள்ள மாநில அல்லது மாவட்ட கால்நடை அதிகாரிகளுக்கு உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று அது கூறியுள்ளது.

இந்த நோய் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், கால்நடைகளுக்கு எடை இழப்பு, பால் உற்பத்தி குறைதல், கருச்சிதைவு மற்றும் கருவுறாமை போன்ற ஆபத்து இருப்பதால் இங்குள்ள கால்நடைத் தொழிலை பாதிக்கும் என்று அது தெரிவித்தது.