Home நாடு சீன கடல்சார் காவல்படை கப்பல் மீண்டும் மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது

சீன கடல்சார் காவல்படை கப்பல் மீண்டும் மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது

1008
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 16 சீன இராணுவ விமானங்கள் அண்மையில் மலேசிய வான்வெளியில் பறந்ததை அடுத்து, சீன கடல்சார்  காவல்படை கப்பல் பெதிங் பாதிங்கி அலி (லூகோனியா ஷோல்ஸ்) அருகே பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 4-ஆம் தேதி மலேசிய கடல் பகுதியை ஆக்கிரமித்த கப்பல் மிரி கடற்கரையின் 84 கடல் மைல் (155 கி.மீ) தொலைவில் சென்றுள்ளது.

மிரி மலேசிய கடல்சார் துறை தலைவர் முகமட் பௌசி ஓத்மான் இந்த விஷயத்தை தி போர்னியோ போஸ்டிடம் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“ஆம், ஜூன் 4-ஆம் தேதி சீன காவல்படை நம் கடலுக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து எங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்தது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். மலேசிய கடற்படை நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன,” என்று அவர் கூறியுள்ளார்.

2016 மற்றும் 2019- க்கு இடையில், சீனா காவல்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் மொத்தம் 89 முறை மலேசிய கடலில் அத்துமீறி நுழைந்துள்ளன.