Home நாடு 98 மலேசிய கடற்படை மாலுமிகளுக்கு கொவிட்-19 தொற்று

98 மலேசிய கடற்படை மாலுமிகளுக்கு கொவிட்-19 தொற்று

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடற்படையைச் சேர்ந்த மஹாவாங்சா கப்பலின் மொத்தம் 98 மாலுமிகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

கப்பலில் ஏறுவதற்கு முன்னர் அனைத்து மாலுமிகளும் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், மேலும் அவை எதிர்மறையாக இருந்ததாகவும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“கப்பலில் சில நாட்கள் இருந்தபின் அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை சம்பந்தப்பட்ட அனைத்து மாலுமிகளும் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 10 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் எதிர்மறையாக இருந்தால் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்று மாலுமிகளுக்கு எவ்வாறு பரவியது என்பதை தனது தரப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“கொவிட் -19 இப்போது சமூகத்தில் உள்ளது. அவர்கள் கப்பலுக்குச் செல்வதற்கு முன்பு, அவர்கள் வீட்டில் இருந்தபோது அல்லது கடைக்குச் சென்றபோது ஏற்பட்டிருக்கலாம்,” என்று அவர் கூறினார்.