Home நாடு 3 மாதங்களுக்கும் குறைவான தண்டனை உள்ள கைதிகளை சேவை செய்ய விடுவிக்கவும்

3 மாதங்களுக்கும் குறைவான தண்டனை உள்ள கைதிகளை சேவை செய்ய விடுவிக்கவும்

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நம்பிக்கை கூட்டணி பாதுகாப்புக் குழு உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

“செப்டம்பர் 2020- இல் கொவிட் -19- இன் மூன்றாவது அலை பரவியது, தடுப்புக்காவல் மையங்களில் இருந்து தோன்றியது. தெளிவாக, அது சமூகங்களுக்குள் பரவி சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

“ஒரு வருடத்திற்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்காக, மீதமுள்ள மூன்று மாதங்களுக்கும் குறைவான தண்டனையுடன், உரிமம் பெற்ற கைதிகள் திட்டத்தை (பிபிஎஸ்எல்) அமல்படுத்துவதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், ,” என்று அக்குழு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அபராதம், சமூக சேவை மற்றும் சாதனக் கண்காணிப்புடன் வீட்டுக் காவல் போன்ற சிறிய குற்றங்களுக்கான சிறைத்தண்டனைக்கு மாற்று தண்டனைகளை ஆராயவும் குழு பரிந்துரைத்தது.