Home நாடு மாமன்னரைச் சந்திக்க பெஜுவாங்கிற்கு அழைப்பு!

மாமன்னரைச் சந்திக்க பெஜுவாங்கிற்கு அழைப்பு!

864
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னமும் பதிவு செய்யப்படாத பெர்ஜுவாங் கட்சி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்திக்குமாறு அழைக்கப்பட்ட கடிதத்தைப் பெற்றதை உறுதிப்படுத்தியது.

அதன் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்த வியாழக்கிழமை மாமன்னரைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருப்பதாக பெஜுவாங் தகவல் தலைவர் உல்யா அகமா ஹுசமுடின் தெரிவித்தார்.

“மாமன்னரைச் சந்திக்க அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த வாரம் பெறப்பட்டது. இருப்பினும், இன்னும் தீர்மானிக்கப்படவில்லை,” என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மாமன்னர் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்த வதந்திகளை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டது.