இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 627,652- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 5,566 தொற்று சம்பவங்களில் 5,562 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 4 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 82,797 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 903 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 458 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 76-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,536-ஆக உயர்ந்திருக்கிறது.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,524 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து சரவாக்கில் 707 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலானில் 505 தொற்றுகள் பதிவாயின.