Home இந்தியா மன அழுத்தத்தால் திமுக-வில் இருந்து நடிகை குஷ்பு விலகல்!

மன அழுத்தத்தால் திமுக-வில் இருந்து நடிகை குஷ்பு விலகல்!

836
0
SHARE
Ad

kushboo1சென்னை, ஜூன் 17 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த குஷ்பு, தற்போது சின்னத்திரையிலும், தயாரிப்பாளராக திரைப்படத் துறையிலும் நடித்து, இயங்கி வருகிறார்.

இந்நிலையில், அரசியலில் நுழைய முடிவு செய்த குஷ்பு, திமுக-வில் இணைந்தார். கடந்த சட்டசபை தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பம்பரமாக சுழன்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த அவர், தற்போது திமுக-வில் இருந்து திடீரென்று விலகியுள்ளார்.

தனது விலகல் கடிதத்தை திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குஷ்பு கூறியிருப்பதவது, “என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே எற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தி.மு.கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

#TamilSchoolmychoice

அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள பொது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே திராவிட  முன்னேற்ற கழகத்திலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்” என நடிகை குஷ்பு அந்த கடித்தத்தில் கூறியுள்ளார்.