Home கலை உலகம் சூர்யா, பிரியாமணியை பின்பற்றும் பிபாஷா பாசு!

சூர்யா, பிரியாமணியை பின்பற்றும் பிபாஷா பாசு!

476
0
SHARE
Ad

pipas pasu,சென்னை, ஜூன் 17 – சூர்யா வழியில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார் பிபாஷா பாசு. “மாற்றான்” படத்தில் இடுப்போடு ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கினார்.

இதேபோல் பிரியாமணியும் ஒட்டிபிறந்த இரட்டையர் வேடத்தில் “சாருலதா” என்ற படத்தில் நடித்தார். தற்போது இந்த பாணி இந்தி படவுலகையும் விட்டுவைக்கவில்லை. பாலிவுட் கதாநாயகி பிபாஷா பாசு இடுப்புடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.

பிறக்கும்போதே ஒட்டிப்பிறந்தவர்களில் பின்னர் ஒருவர் மட்டும் எப்படி பேயாகி காதலனை பழிவாங்குகிறார் என்பதே கதை. இதற்காக பிபாஷா பாசுவை சமீபத்தில் புகப்படம் எடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர் கூறும்போது, இதுவரை இதுபோல் ஒரு வேடம் ஏற்றதில்லை. மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய கதாபாத்திரம் என்பதை உணர்ந்திருக்கிறேன். இதற்கு முன் இதுபோல் நடித்தவர்களின் பாணியை பின்பற்றுவேன் என்றார் கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு.