Home நாடு “மாஸ் நிறுவனத்தை காப்பாற்ற பலம் வாய்ந்த தனியார் நிர்வாகம் தேவை” – மகாதீர் கருத்து

“மாஸ் நிறுவனத்தை காப்பாற்ற பலம் வாய்ந்த தனியார் நிர்வாகம் தேவை” – மகாதீர் கருத்து

601
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர், ஜூன் 17 – மாஸ் நிறுவனம் தனது சரிவிலிருந்து எழுந்து, மீண்டும் மக்களிடையே அதன் மதிப்பு உயர வேண்டுமானால், அந்நிறுவனம் தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

மாஸ் நிறுவனத்தை வழிநடத்த அதற்குத் தகுந்த பலம் வாய்ந்த தனியார் நிறுவனம் முன் வர வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாஸ் நிறுவனத்தில் நடந்துள்ள பல முறைகேடுகள் கண்டறியப்பட்டு அவை ஒழிக்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னர், அந்நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் கஸானா நேஷ்னல் பெர்ஹாட் அதிலிருந்து வெளியேறுவது தான் சிறந்தது என்றும், காரணம் லாபம் ஈட்டுவதற்கு கஸானாவிற்கு வேறு பல நிறுவனங்கள் உள்ளன என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த மே மாதம் மாஸ் நிறுவனப் பணியாளர்கள் சங்கம், மாஸ் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்து, அதன் தலைமைத்துவ நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், அந்நடவடிக்கை காலம் கடந்த நடவடிக்கையாக இருக்கும் என்று அப்போது நஜிப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.