Home தொழில் நுட்பம் மென்பொருள் கோளாறு: 10 நிமிடங்களுக்கு மேலாக ஸ்தம்பித்த பேஸ்புக்!   

மென்பொருள் கோளாறு: 10 நிமிடங்களுக்கு மேலாக ஸ்தம்பித்த பேஸ்புக்!   

559
0
SHARE
Ad

facebook_crashed_tweet_0910லண்டன், ஜூன் 20 – நட்பு ஊடகமான பேஸ்புக் நேற்று காலை 10 நிமிடங்களுக்கு மேலாக உலகின் பல நாடுகளில் ஸ்தம்பித்தது.

உலகம் முழுவதும் பல மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

அவ்வப்போது, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்ற பேஸ்புக், நேற்று உலகளாவிய அளவில் ஸ்தம்பித்தது. பயனர்கள் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொழுது நேற்று சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக செயல்படவில்லை.

#TamilSchoolmychoice

பேஸ்புக்கின் இணைய பக்கத்தினை தொடரும் பொழுது தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதாக அறிவிப்புகள் மட்டுமே வெளிவந்தது.

இதனால் கணினி மற்றும் செல்பேசிகள் வாயிலாக தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்த பேஸ்புக் பயனாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இது பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பேஸ்புக்கின் மென்பொருள் அமைப்பு ஒன்றினை மேம்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, இந்த பிரச்சனை ஏற்பட்டது. அடுத்த 30 நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டது” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் இணையதளம் 10 நிமிடங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டாதால் இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பின்னர் பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.