Home உலகம் ஆப்கன் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தலிலும் குளறுபடி – தவிப்பில் ஆப்கன் மக்கள்!

ஆப்கன் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தலிலும் குளறுபடி – தவிப்பில் ஆப்கன் மக்கள்!

622
0
SHARE
Ad

Afkhan-Electionகாபூல், ஜூன் 20 – ஆப்கானிஸ்தான் அதிபருக்கான இரண்டாம் கட்ட தேர்தலிலும் குளறுபடி நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து விட்ட நிலையில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான அப்துல்லா அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அப்துல்லா, வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து தங்கள் தரப்பு பார்வையாளர்களையும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ashraf ghaniஇது குறித்து அவர் கூறுகையில் “இங்கு நடைபெற்ற தேர்தல் நடவடிக்கைகள் எதுவும் சட்டப்பூர்வமாக நடைபெறவில்லை. அனைத்தும் ஒரு தலைபட்சமாக நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

abdullahஆனால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரஃப் கனி (படம்) அதிக வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதால் அப்துல்லா இவ்வாறு குறை கூறுவதாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் அப்துல்லா முன்னிலை வகித்த பொழுது, போட்டி வேட்பாளர்கள் தேர்தல் முறைகேடு நடந்ததாக புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.