Home நாடு எம்எச்370: தேடுதல் வேட்டை மீண்டும் தெற்கே திரும்புகின்றது!

எம்எச்370: தேடுதல் வேட்டை மீண்டும் தெற்கே திரும்புகின்றது!

455
0
SHARE
Ad

mh370-vesselகோலாலம்பூர், ஜூன் 20 – மாயமான மாஸ் எம்எச்370 விமானத்தை தேடுவதற்காக, மீட்புக்குழுவினர் மீண்டும் ஆஸ்திரேலியாவின்பெர்த் நகரில் இருந்து 1,800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடல் பகுதிக்கே திரும்பியுள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், அந்த இடத்தில் விமானத்தின் பாகங்களை தேடிய மீட்புக்குழுவினர், திடீரென அங்கிருந்து பல கிலோமீட்டர் வடக்கில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு கடலுக்கடியில் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து சமிஞைகள் கிடைப்பதாகவும், இரண்டே நாளில் விமானத்தின் பாகங்கள் கடலுக்கடியில் மீட்கப்பட்டு விடும் என்றும் பல்வேறு திடீர் திருப்பங்களை ஏற்படுத்தினர்.

#TamilSchoolmychoice

ஆனால், விமானத்தின் பாகம் என்று கூறி, இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய தகவல்களின் அடிப்படையில் ஆஸ்திரேலிய கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) தற்போதைய தேடும் பகுதியில் இருந்து 800 கிலோமீட்டருக்கு தெற்கே இதற்கு முன்பு தேடிய இடத்தில் மீண்டும் தேடுதல் பணியை மேற்கொள்ளவுள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.