கோலாலம்பூர், ஜூன் 20 – இணையத்தளங்களில் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக கூறப்பட்டிருப்பது, சில தரப்பினரின் அரசியல் தூண்டுதல் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
முகைதீனுடன் தனக்கு நல்லுறவும், புரிதலும் இருப்பதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நஜிப் வெளியிட்ட அறிக்கையில், தான் அறிமுகப்படுத்திய தேசிய உருமாற்றுத் திட்டத்தின் கீழ் அனைத்து அரசாங்க கொள்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களிலும் முகைதீன் யாசின் தனக்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் அனைத்து முயற்சிகளுக்கும்,முகைதீன் உறுதுணையாக இருந்து கட்சியை வலுப்படுத்த கடுமையாக பணியாற்றுவார் என்றும் நஜிப் தெரிவித்தார்.