Home கலை உலகம் என் திறமை அஜீத்துக்கு தெரியும் – த்ரிஷா

என் திறமை அஜீத்துக்கு தெரியும் – த்ரிஷா

593
0
SHARE
Ad

ajith-kumar-trishaசென்னை, ஜூன் 23 – என் நடிப்புத் திறமை அஜீத்துக்குத் தெரியும். அதனால்தான் அவர் படத்தில் மீண்டும் வாய்ப்பு தந்துள்ளார், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். அஜீத்துடன் அதிகப் படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவுக்குதான் முதலிடம்.

‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் இணைந்து நடித்தவர், இப்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் இணைந்துள்ளார். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சத்யா என்ற தலைப்பை தற்காலிகமாக வைத்துள்ளனர். அஜீத் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று போலீஸ் அதிகாரி வேடம்.

#TamilSchoolmychoice

ajith-trishaஅஜீத்துடன் மீண்டும் நடிப்பது த்ரிஷாவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் அதிகப் படங்களில் நடித்த நாயகி என்ற பெருமை வேறு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

இது குறித்து த்ரிஷா கூறுகையில், “அஜீத்துடன் நான் நடிக்கும் நான்காவது படம் இது. எனது நடிப்புத் திறமை பற்றி அவர் ஏற்கனவே அறிந்திருப்பதால்தான் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் என்னை நடிக்க வைத்துள்ளார். அவர் எப்பவுமே என்னோட சிறண்ட ஜோடி,” என்று கூறியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷாவுக்கு, அஜீத் பட வாய்ப்பு கிடைத்துள்ளதால், மேலும் புதிய படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது.