Home நாடு இந்தியாவில் ஊழலை ஒழிக்க மோடியின் அதிரடி நடவடிக்கைகள் – அன்வார் புகழாரம்

இந்தியாவில் ஊழலை ஒழிக்க மோடியின் அதிரடி நடவடிக்கைகள் – அன்வார் புகழாரம்

475
0
SHARE
Ad
anwar-ibrahim

பினாங்கு, ஜூன் 23 – இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, பல அதிரடி திட்டங்களை வகுத்திருப்பதை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் , மலேசியாவிலும் அரசாங்கம் அது போல் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் முனைப்பு காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அன்வார், நாட்டில் நடக்கும் ஊழல்கள் அனைத்தையும் பக்காத்தான் தலைவர்கள் சுட்டிக்காட்டினாலும், தேசிய முன்னணி அதை பொருட்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதே நேரத்தில், தேசிய முன்னணி தலைவர்கள், பக்காத்தானின் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சீன சமுதாயத்தில் மட்டுமே அதிக அக்கறை காட்டுவதாக கூறுகின்றனர் என்றும் அன்வார் கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியாவில் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலையே, ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு மூத்த உச்ச நீதிமன்ற  நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வலியுறுத்தியது தான் என்று அன்வார் புகழாரம் சூட்டினார்.

எந்த வித ஆவணங்களும் இன்றி, மறைமுகமாக கோடிக் கணக்கான  பணம் சுரண்டப்படுவதையும், மக்களின்  பணம்  களவாடப்படுவதையும் தான் இனி அனுமதிக்கப்போவதில்லை என்று மோடி தனது அமைச்சரவையில் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதை அன்வார் சுட்டிக் காட்டினார்.

ஊழல் விவகாரங்களில் ஒரு நாட்டின் அரசாங்கம் இப்படி தான் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.