Home கலை உலகம் தங்கத் தொட்டியில் குளிக்கும் ஷாருக்கான்!

தங்கத் தொட்டியில் குளிக்கும் ஷாருக்கான்!

698
0
SHARE
Ad

shahrukh khan,மும்பை, ஜூன் 23 – மும்பையில் இருக்கும் எனது அடுக்குமாடி வீட்டில் தங்கத் தொட்டி குளியலறை உள்ளது. அதில்தான் தினமும் குளிப்பேன் என்று கூறியுள்ளார் ஷாருக்கான். மேலும், அந்த வீட்டில் சினிமா பார்ப்பதற்கென்றே தனியாக ஒரு அறை வைத்துள்ளேன் என்றார்.

சிறுவயதில் பணம் இல்லாததால் தன்னால் திரையரங்குக்குள்ளே செல்ல முடியவில்லை என்ற பாதிப்பு இப்போதும் ஷாருக்கான் மனதில் இருக்கிறதாம். டெல்லியில் ஏழ்மையோடு போராடிய வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளாராம். அதுதான் தனது வெற்றிக்கு அடிப்படையாக இருந்ததாகவும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது,“நான் பணத்தையும், புகழையும் அடையவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் குளியலறையில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ‘கிங்’ என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்”.

#TamilSchoolmychoice

srkspeaksமேலும்,“எல்லோருக்கும் என்னை தெரிவதால், எனது தனிமை பாதிக்கப்படுவதாக நான் நினைப்பதில்லை. பணமும், புகழும் எப்போதும் என்னோடு இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் நான் தெரிந்தவனாக இருப்பதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.

வாழ்க்கையோடு நான் பட்ட கஷ்டங்களும், அந்த அனுபவங்கள் தந்த பாடங்களுமே இந்த ஷாருக்கானை உருவாக்கியிருக்கிறது.  நான் சந்தித்த இன்னல்கள் ஒவ்வொன்றும் நான் மிகப்பெரிய உயரத்தை அடைய ஒத்துழைத்தது. அதனால் அப்படிப்பட்ட ஒரு காலம் என் வாழ்க்கையில் இருந்ததை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.

‘பாஸிகர்’ சினிமா வெளியான பின்பு, நான் நியூயார்க் சென்றிருந்தேன். அங்கு விலை உயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பார்த்தேன். அந்த கைகடிகாரத்தை வாங்க, என்னிடம் ஐம்பது டாலர் குறைவாக இருந்தது. அங்கிருந்த விற்பனை பணியாளர் நல்ல இந்தியர்.

shahrukh khan‘நீங்கள் சினிமா நடிகர். பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காதீர்கள். இதை வாங்கி அணிந்துகொள்ளுங்கள்’ என்று கூறி, என்னிடம் இருந்த பணத்தை வாங்கிக்கொண்டு அந்த கைகடிகாரத்தை கொடுத்தார். அதுதான் நான் முதன்முதலில் வாங்கிய பிராண்ட்டட் கைகடிகாரம். டாக் என்பது அதன் பெயர்.

அந்த கைகடிகாரம் இப்போதும் என் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் அதை என் மகன் ஆர்யனுக்கு கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார் ஷாருக்கான். இதில் பெரிய திருப்பம் என்னவென்றால், இப்போது அந்த கடிகார நிறுவனத்தின் விளம்பர தூதரே ஷாருக்கான்தான்.

மேலும், அவர் கூறியதாவது,”எனக்கு 48 வயது முழுமையடைந்துவிட்டது. என் வயதில் பாதி கொண்ட கதாநாயகிகளோடு நான் டூயட் பாடி என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். சண்டைக்காட்சிகளில் கட்டிடங்களின் மேல் நின்று குதிக்கவும் நான் விரும்புகிறேன். ரசிகர்கள் என்னை விரும்பும் காலம் வரை அதை எல்லாம் செய்துகொண்டிருப்பேன்..” என்று உற்சாகமாக சொல்கிறார், ஷாருக்கான்.