சிங்கப்பூர், ஜூன் 24 – உலகின் மிகப் பெரிய ‘செங்குத்து தோட்டம்’ (Vertical Garden) என்ற பெயரை சிங்கப்பூரின், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பான “ட்ரீ ஹவுஸ்” பெற்றுள்ளது.
சிங்கப்பூர் அப்பர் புக்கிட் தீமா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் முகப்பில் சுமார் 2,289 ஸ்கொயர் மீட்டர் அளவிற்கு செங்குத்து தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த கட்டிடம் உலகின் மிகப் பெரிய ‘செங்குத்து தோட்டம்’ என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்டிடத்தின் உரிமை நிறுவனமான சிட்டி டெவலப்மண்ட் லிமிடட் அறிவித்துள்ளது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அசத்தல் படங்களை கீழே காணலாம்:-
படங்கள்: EPA
Comments