Home World Cup Soccer 2014 உலகக்கிண்ணம் முடிவுகள் (‘D’ பிரிவு) – இத்தாலி 0 – உருகுவே 1

உலகக்கிண்ணம் முடிவுகள் (‘D’ பிரிவு) – இத்தாலி 0 – உருகுவே 1

711
0
SHARE
Ad

நட்டால் (பிரேசில்), ஜூன் 25 – இன்று அதிகாலை மலேசிய நேரப்படி நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘டி’ பிரிவுக்கான இறுதிக் கட்ட ஆட்டங்களில் இத்தாலியும், தென் அமெரிக்க நாடான உருகுவேயும் மோதின.

இந்த ஆட்டத்தில் வென்றால்தான், போட்டிகளின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நிலையில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் இருக்கும்போது, உருகுவே ஒரு கோல் போட்டு வெற்றியை நிலைநாட்டிக் கொண்டது.

உருகுவேயுடன் சரிசம நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டிருந்தாலும், இத்தாலி அடுத்த கட்டத்திற்கு தேர்வு பெற்றிருக்கும். காரணம், இதுவரை மற்ற ஆட்டங்களில் அடித்த கோல்களின் எண்ணிக்கையில் இத்தாலி முன்னணியில் இருந்தது.

#TamilSchoolmychoice

இத்தாலி – உருகுவே ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:-

Uruguay's Diego Godin (L) and Italy's Ciro Immobile (R) vie for the ball during the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Uruguay at the Estadio Arena das Dunas in Natal, Brazil, 24 June 2014.

Italy's goalkeeper Gianluigi Buffon vies with Uruguay's Luis Suarez (R) during the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Uruguay at the Estadio Arena das Dunas in Natal, Brazil, 24 June 2014.

படங்கள்: EPA