Home நாடு 43,000 பால்வெட்டு தொழிலாளர்களுக்கு 500 மலேசிய ரிங்கிட் சிறப்பு சன்மானம்

43,000 பால்வெட்டு தொழிலாளர்களுக்கு 500 மலேசிய ரிங்கிட் சிறப்பு சன்மானம்

507
0
SHARE
Ad

tapping01பத்துபகாட், ஜூன் 26– புனித ரமலான் மாதத்தையொட்டி, மொத்தம் 43,000 பால்வெட்டு தொழிலாளர்களுக்கு கூடிய விரைவில் 500 வெள்ளி  சிறப்பு சன்மானம் அளிக்கப்படவிருக்கிறது.

தோட்டங்களின் நில உரிமையாளர்களிடம் தற்போது பணிபுரியும் பால்வெட்டுத் தொழிலாளர்களுக்கு இத்தொகை அளிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று ஜோகூர் மாநிலத்தின் பத்துபகாட்டில் நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

14 கிராமங்களுக்கு சிறப்பு விருதுகள் அளிக்கும் நிகழ்ச்சி கம்போங் பாரிட் ஹாஜி அலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.

#TamilSchoolmychoice

ரப்பர் மூலப் பொருள் விலை சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கு இத்தொகை அளிக்கப்படுவதாக பிரதமர் சொன்னார்.

இம்மாத தொடக்கத்தில் கிராம வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சிறு தோட்டக்காரர்களுக்கு அளித்த தொகைபோல் இது அமையும். நோன்பு மாதத்தின்போது அமைச்சினால் இத்தொகை அளிக்கப்படுமென்றும் நஜிப் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முகமட் காலிட்  நோர்டினும், அமைச்சர் ஷாபி அப்டால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.